பத்திரப்பதிவுத்துறையில் 100 நாளில் 4,988 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
பத்திரப்பதிவு துறை
பத்திரப்பதிவு துறையில் அமைச்சர் மூர்த்தி பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் காரணமாக இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பத்திரப்பதிவு துறை தற்போது அதிக வருவாய் ஈட்டி உள்ளது. அந்த வகையில், பதிவுத்துறையில் கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூலை 12ம் தேதி வரை 100 நாட்களில் 4,988.18 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2021 இதே காலகட்டத்தில் 2,577.43 கோடி ரூபாய் கிடைத்த நிலையில் தற்போது 2,410.75 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. மேலும் பத்திரப்பதிவு துறையில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவந்தால் அதிக வருவாயை ஈட்ட முடியும் என பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

