நீலகிரி, கோவை, தேனி, செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘ தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் ஓரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை சுற்றுவட்டார பகுதியை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். ஓரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

