நடுக்கடலில் கலைஞருக்கு பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நினைவுச் சின்னம்
கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு. கருணாநிதி உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் தற்போது கலைஞருக்கு நினைவிடம் அமைக்கும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கலைஞருக்கு சுமார் 80 கோடி ரூபாய் செலவில், 137 அடி உயரத்தில் நடுக்கடலில் பேனா நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்க தமிழக அரசு சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

