இந்தியாசமூகம் - வாழ்க்கை

தம்பியை கொன்ற அண்ணன்கள் – ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு !

சொத்து தகராறில் தம்பியை கொன்ற சகோதரர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது.

ஆயுள் தண்டனை

மும்பை மாநகர் ஜே.ஜே. மார்க் பகுதியை சேர்ந்தவர் நசுருதீன் (45). இவருக்கும், இவரது அண்ணன்களான அலாலுதீன் (52), அமீருதீன் (50) ஆகியோருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. தகராறு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி சகோதரர்கள் 2 பேரும் சேர்ந்து தம்பி நசிருதீனை கத்தியால் குத்தி கொலை செய்தனர். அதேபோல அக்கா ருகாயாவையும் கொலை செய்ய முயன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அலாலுதீன், அமீருதீன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சொத்து தகராறில் தம்பியை கொலை செய்த சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீா்ப்பு அளித்துள்ளனர்.

Related posts