10-15 ஆண்டுகளாக நான் உழைத்த கட்சி திமுக என்று முன்னாள் பாஜக மதுரை மாவட்ட தலைவர் சரவணன் கூறியுள்ளார்.
டாக்டர் சரவணன்
ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற போது தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது காலணி வீசப்பட்டது. மேலும், இது தொடர்பாக முன்னாள் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சரவணன், அவரை நேரில் சந்தித்து தனது வருத்தத்தை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன், ‘பாஜகவின் மத அரசியலால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பாஜகவில் இருந்து விலகுகிறேன். மேலும், திமுகவில் இணைவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இருப்பினும் திமுக எனக்கு தாய் வீடு தான்’ என்று கூறியுள்ளார்.

