அறிவியல்

செயற்கை நுண்ணறிவின் பின் இருக்கும் அறிவியலும் ஆபத்தும் !

அறிவியல் துறையில் தற்போது முன்னனி கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இருப்பது செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) . ஆம் அதாவது தன்னிடம் இருக்கக்கூடிய தரவுகள் (Data), பெறும் அனுபவங்கள் (Future Experience) அனைத்தையும் வைத்துக்கொண்டு இயந்திரம் தானாகவே முடிவெடுக்க கூடிய செயல்பாடுதான் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence).

 

ஒரு இயந்திரம் ஆரம்பத்திலேயே தானாக முடிவுகளை எடுக்காது . முன்னதாக மனிதர்களின் மூலமாக தரவுகள் கொடுக்கப்படவேண்டும் . ஏற்கனவே கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் இயந்திரத்தின் முடிவு இருக்கும் , ஆனால் அது துல்லியமானதாக இருக்காது .

தானாகவே கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு இயந்திரமும் பின்வரும் மூன்று முக்கிய பகுதிகளை கொண்டிருக்கும்.

Model
Parameters
Learner

ஒவ்வொரு தரவுகளையும் ஆராய்ந்து அதற்கேற்ப தன்னுடய முடிவுகளை சரியான முடிவை நோக்கி மாற்றிக்கொண்டே இருக்கும் . புரியும்படி சொல்லவேண்டும் எனில் இரண்டு மூன்றுமுறை பயணித்தால் நாமே கணித்து கூறுகிறோம் அல்லவா அதனை போலவே இயந்திரமும் கணித்துக்கூறும். எவ்வளவுக்கு எவ்வளவு தரவுகளை நாம் கொடுக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு முடிகளில் துல்லியத்தன்மை அதிகரித்துக்கொண்டே போகும் .

செயற்கை நுண்ணறிவு அல்லது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்பதனை பயன்படுத்தப்படும் அப்ளிகேசன்களை பொறுத்து இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.

 >> Vertical AI

Vertical AI என்பது மிகவும் எளிமையான ஒரேயொரு பணியினை செய்கின்ற இன்டெலிஜென்ஸ் கணினி. ஒரேயொரு பணியினை திரும்ப திரும்ப செய்கின்ற பணிக்கு இவ்வகை ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் சிறப்பாக அந்த வேலையை செய்யும். உதாரணத்திற்கு கால அட்டவணையை தயாரிக்கின்ற வேலை போன்றவற்றை இவை செய்யும்.

>> Horizontal AI

Horizontal AI என்பது பல்வேறு வேலைகளை செய்யும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். கார்டனா (Cortana) , சிரி (Siri), and அலெக்ஸா (Alexa) போன்றவை சில உதாரணங்கள். இவற்றைக்கொண்டு பல பணிகளை செய்துகொள்ள முடியும். 

இந்த வகை இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் நமது குரலை அறிந்து, நமது உச்சரிப்பை உணர்ந்து, இணையத்தில் இருந்து நமக்கான தகவலை பெற்று செயல்படுகிறது.

Machine Learning : 

Machine Learning என்பதற்கான விளக்கம் அதன் பெயரிலேயே இருக்கிறது. ஆம் ஒரு கணினியில் இருக்கக்கூடிய மென்பொருளானது (Computer Algorithm) இன்னொரு புரோகிராமை அனுபவத்தின் மூலமாக தானாகவே கற்றுக்கொள்ள அனுமதிக்கும் தொழில்நுட்பம் தான் மெஷின் லேர்னிங் (Machine Learning) என அழைக்கப்படுகிறது.

மறைந்திருக்கும் ஆபத்து : 

எந்தவொரு கண்டுபிடிப்பிலும் நன்மையும் இருக்கும் தீமையும் இருக்கும் . இயந்திரங்கள் படிப்பதனால் ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும் மிகப்பெரிய ஆபத்துக்களும் இருக்கவும் செய்கின்றன .உதாரணத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தில் ரோபோ சுயமாக சிந்திக்கும்போது வருகின்ற ஆபத்துக்களை கண்டிருப்போம் . அதனைபோலவே நிகழ்காலத்திலும் நடைபெற வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன .

இயந்திரங்கள் மனிதனின் கட்டுப்பாட்டில் இருக்கின்றவரை எந்தவொரு பிரச்சனையும் ஏற்படவாய்ப்பில்லை . ஆனால் எவரேனும் கண்டுபிடிப்புகளை தவறாக பயன்படுத்தி மனிதனின் கட்டுப்பாடின்றி சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் இயந்திரங்களை உருவாக்கினால் மிகப்பெரிய ஆபத்தானதாக முடியும் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை .

 

 

Related posts