அறிவியல்

ஹிப்னோடிசம் எனப்படும் தரவுதுயில் கலை பற்றித் தெரியுமா?

ஒருவனின் மூளையைச் சுழுத்தி நிலை போன்ற செயற்கையான ஆழ்ந்த அறிநிலைக்குக் கொண்டு வரும் ஒரு கலை தரவுதுயில் ஆகும் (Hypnotism).

அந்நிலையில் தரவு துயிலாழ்த்துவோன் (Hypnotist) அவனைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்கக்கூடும்.

hypnosis

ஆழ்மனப்பரப்பை ஆய்வு செய்து நோயாளியின் அடி மனதில் புதைபட்டு மறைந்து கிடக்கும் கவலைகளையும் அக அழுத்தங்களையும் விடுவிக்கும் ஒரு நெறியே இது.

தரவு துயில் நெறியின் வெற்றி, நோயாளி தரவு துயிலாழ்த்துவோனிடம் கொண்டுள்ள நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் பொறுத்தே அமையும்.

நோயாளி இயல்பான நிலைக்கு வந்துவிட்டால் அவனுடைய மனம் எளிய குழந்தை மனநிலைக்கு வந்துவிடும்.

இளமையில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளும் அவனை ஆழமாகத் தாக்கிய நிகழ்ச்சிகளும், அவன் நினைவிற்கு அடிக்கடி வரும்.

hypnotism
 

இந்தச் சூழ்நிலையில் துயிலாழ்த்துவோன் பயிற்சி பெற்ற மருத்துவனாகவும் இருந்தால் அவனுடைய அச்சங்களைப் புரிந்து கொண்டு அவனுக்கு உதவ முடியும்.

வியன்னாவைச் சேர்ந்த பிரான்ஸ் மெஸ்மர் (Franz Mesmer) முதலாவதாகத் தரவு துயில் நெறியை மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தினார். அவருடைய தரவு துயில் உத்தி (Technique) ஆற்றல் வசியம் (Mesmerism) என அறியப்பட்டிருந்தது.

Related posts