இந்தியாவில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு தளவாடங்கள்
கடந்த 2021 – 2022 நிதியாண்டில் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் ஏற்றுமதியில் அதிக வருவாயை ஈட்டியுள்ளது. அதன்படி இந்த நிதியாண்டில் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது. இதில் 70 சதவீதம் தனியார் நிறுவனங்களில் இருந்தும், 30 சதவீதம் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்தும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் தென் கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது. முக்கியமாக கடந்த ஜனவரி மாதம் 2,770 கோடி ரூபாய் மதிப்பில் பிரமோஸ் ஏவுகணை பிலிப்பைன்ஸ் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தோனேசியா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கும் ஏவுகணைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளது.