சமூகம்தமிழ்நாடு

சென்னை : கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ மீண்டும் சோதனை !

சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ சிறப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிபிஐ சிறப்பு அதிகாரிகள்

காங்கிரஸ் கட்சியும் சேர்ந்தவரும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கார்த்தி சிதம்பரம். இவர் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த மே மாதத்தில் கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இவர் சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தற்போது மீண்டும் சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டில் டெல்லியில் இருந்து வந்த 6 சிபிஐ சிறப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் முக்கிய ஆதாரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts