பொன்னியின் செல்வன் எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டிய படம் என்று இயக்குனர் மணிரத்னம் கூறியுள்ளார்.
இசை வெளியீட்டு விழா
மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பொன்னியின் செல்வன். செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குனர் மணிரத்னம், ‘நான் கல்லூரிக் காலத்தில் படித்த புத்தகம் பொன்னியின் செல்வன். 40 ஆண்டுகளாக இந்த புத்தகம் என் மனதில் இருந்தது.
மணிரத்னம் பேச்சு
நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிக்கவிருந்த படம் பொன்னியின் செல்வன். ஆனால் பல்வேறு காரணங்களால் அவரால் அந்த சமயத்தில் பொன்னியின் செல்வன் பண்ண முடியாமல் போனது. அவர் எங்களுக்காக இந்த படத்தை விட்டு சென்றுள்ளார் என்பது எனக்கு இப்போது தான் புரிகிறது. ஏற்கனவே இந்த படத்தை எடுக்க நானே 3 முறை முயற்சி செய்தேன் ஆனால் இப்போது தான் சாத்தியமானது’ என்று மணிரத்னம் கூறினார்.

