சமூகம்தமிழ்நாடு

புதுக்கோட்டையில் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை!

லஞ்ச ஒழிப்பு துறை

மதுரை மாவட்ட பதிவாளராக வேலை பார்த்து வந்தவர் அஞ்சனகுமார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் புதுக்கோட்டை மாவட்ட பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவாளராக நியமிக்கப்பட்டார். மதுரையில் இவர் பணியாற்றியபோது முறைகேடாக ஏராளமான பத்திர பதிவுகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் மூலம் ஏராளமான சொத்துக்களை வாங்கி செத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த புகார்களின் அடிப்படையில் அஞ்சனகுமார் வீட்டில், லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ஜவகர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு, இன்று அதிகாலை 6.30 மணி முதல் சோதனை நடத்தினர்.

மேலும், விசாரணையின் முடிவில் அஞ்சனகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

Related posts