வணிகம்

வணிக முத்திரை (Trademark ) என்றால் என்ன? வாருங்கள் தெரிந்துகொள்வோம்

ஒரு வணிக நிறுவனமோ அல்லது தனிநபரோ தமது பொருளையோ, சேவையையோ தனது வாடிக்கையாளர்களிடம் தனித்துவமாய் அடையாளப்படுத்தப் பயன்படுத்தும் தனிப்பட்ட சின்னத்தை வர்த்தக்குறி (trademark) என அழைக்கிறார்கள். இது ஒருவர் வழங்கும் பொருள் மற்றும் சேவையைப் பிறரிடமிருந்து தனிமைப்படுத்திக் காட்ட உதவும்.

வணிக முத்திரை என்பது கீழ்கண்ட குறிகளின் மூலம் குறிக்கப்படுகிறது

™  ( பொருளைத் தனித்துவப்படுத்தும் பதிவுசெய்யப்படாத வணிகச்சின்னத்தைக் குறிக்க )

℠ (சேவையைத் தனித்துவப்படுத்தும் பதிவுசெய்யப்படாத வணிகச்சின்னத்தைக் குறிக்க)

® (பதிவிட்ட வணிகச்சின்னத்தைக் குறிக்க )

வணிக முத்திரை என்பது பொதுவாக பெயராகவோ, சொல்லாகவோ, சொற்றொடராகவோ, சின்னமாகவோ அல்லது இவை கலந்தோ அமையப்பெறும்.

 

ஒரு நிறுவனம் மற்றும் பொருளுக்கான (PRODUCT) தேர்ந்தெடுக்கும் பெயர் அந்த நிறுவனத்தின் பிராண்ட் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. அந்த பிராண்ட் (BRAND) வாடிக்கையாளர்களுக்கு நம் நிறுவனத்தை மட்டும் நினைவூட்டுவதாக இருக்க வேண்டும்.

வேறு யாரும் நம் நிறுவனம் மற்றும் பொருளின் பெயரை பயன்படுத்துவதை தடுக்க, பெயர் கண்டிப்பாக பதிவு செய்யப்படவேண்டும். நம் நிறுவனத்திற்காக ட்ரேட்‌மார்க் (TRADEMARK)பெற்றுக்கொள்ளுதல் மிக அவசியம்.

பிரிவு 3(1) சட்டத்தின்படி சாதனம்-DEVICE, பிராண்ட், தலைப்பு, எழுத்து, சொல், சொற்றொடர், குறிச்சொல்-LABEL, பெயர், கையொப்பம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதே முத்திரை (MARK) என வகைப்படுத்தப்படுகின்றன.

மேற்கூறிய அனைத்தையும் வணிக முத்திரையாக பதிவு செய்து வணிக முத்திரை சட்டம் 1976ன்கீழ் பாதுகாக்க முடியும். சட்ட ரீதியிலான பாதுகாப்பு ஒருபுறம் இருக்க பொருள்/சேவை ஆகியவற்றிற்கும் அதன் உரிமையாளருக்கும் உள்ள தொடர்பினை காட்டவும் வணிக முத்திரை உதவுகிறது.

பெரும்பாலும் பெயர்களுடன் சின்னங்கள், வசனங்கள், எண்கள், படங்கள், வடிவங்கள், ஓவியங்கள், ஓசை வடிவங்கள் மற்றும் நிறங்கள் என ஒன்றுக்கும் பேற்பட்டவை இணைக்கப்பட்டு வணிக முத்திரையாக்கப்படிருப்பதைக் காணலாம்.

வணிக முத்திரைக்கு பதிவு செய்ய விரும்பும் தரப்பினர் முதலில் எவ்வகையான சின்னம், பெயர், சொல், சொற்றொடர்களைப் பயன்படுத்த உள்ளார் என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும்.

பின்பு, 1 முதல் 45 வரையிலான வணிக முத்திரை வகுப்பில் எப்பிரிவை சேர்ந்தது என்பதை கண்டறிய வேண்டும். நம் பொருள் அல்லது சேவை எவ்வகை வகுப்பில் அடங்குகிறது என்பதை தெளிவாக அறிந்து வைத்திருப்பதன்வழி பதிவுக்காகான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எளிமையாக்கிவிட முடியும்.

இவ்வணிக முத்திரை வகுப்பு இரண்டு பிரிவுகளாகபொருள்கள் (GOODS) மற்றும்  சேவைகள் (SERVICES) என அவற்றின் தன்மைகள் அடிப்படையில் பிரிக்கப்படுள்ளன.

இது குறித்த சரியான வழிமுறைகளை தொழில்முனைவோர் அறிந்திருத்தல் அவசியம் .

உரிமையாளர் பெரும் நன்மைகள்

முத்திரைக்கான சான்றிதழைப் பெற்றுவிடும் நிலையில் நாமே நமது பொருளின் அல்லது சேவையின் முழு முற்றிலுமான உரிமையாளராகிவிடுகிறோம். யாரிடமும் தனியாக இதை தனியாக வேறு வழியில் ஆதரங்காட்ட வேண்டிய அலைச்சல்கள் இல்லை.

வணிக முத்திரை பெற்ற நமது பொருள் அல்லது சேவை நமது சொத்தாக மாறிவிடுகிறது. இதன்மூலம் கிடைக்கப்பெறும் லாபம் நட்டம் ஆகியவற்றிற்கு நாமே முழு பொறுப்பையும் ஏற்போம்.

வணிக முத்திரை ஒரு வகை சொத்தாகக் கருதப்படுவதால் அதனை உரிமை மாற்றம் செய்தல், விற்றல் போன்ற நடவடிக்கைகளையும் எளிதாக மேற்கொள்ள முடியும்.

நமது பொருளை அல்லது சேவையை மற்றவர்களின் பொருளோடு வேவையோடு வேறுபடுத்து காட்ட உதவும். தனித்துவம் மிக்க பொருளை அல்லது சேவையை தனித்து அடையாளம் காட்டும்.

நமது பொருளை அல்லது சேவையை கண்டறிவதில் வாடிக்கையாளர்கள் அடையும் குழப்பத்தை தவிர்க்கலாம்.

பிறர் நமது பொருளின் அல்லது சேவையின் நற்பெயரை சேதப்படுத்தும் நடவடிக்கையை சட்டபூர்வமாக எதிர்கொள்ளலாம்.

நமது வர்த்தக முத்திரையை நாடு முழுவதும் எந்தத் தடையுமின்றி பயன்படுத்த முழு சுதந்திரம் பெறுகிறோம்.

நமது வணிக முத்திரைக்குத் தொடர்ந்து பத்தாண்டு காலம் சட்ட பாதுகாப்பு வழங்கப்படும்; பத்தாண்டுகள் கழித்து மீள் பதிவுனை எளிதாகப் புதுபித்துக் கொள்ளலாம்.

வணிக முத்திரை பதிவு செய்யாதவர் தனது பொருளை அல்லது சேவையைத் தற்காத்துக்கொள்ள சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஏற்படும் பண விரயம், கால விரயம் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.

வியாபாரம் எளிதில் விருத்தியடையும். நிலையான உரிமத் தொகையைப் பெறலாம்

Related posts