நேற்று மாலை மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் விலை இன்று திடீரென்று உயர்ந்துள்ளது.
விலை நிலவரம்
நாட்டின் மிக லாபகரமான முதலீடாக கருதப்படுவது தங்கம் இதனால் சமானியர்கள் மட்டுமின்றி பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்நிலையில், தங்கத்தின் விலை இந்த வாரம் தொடக்கத்தில் இருந்தே உயர தொடங்கியது. இதன்பெயரில் இன்றும் தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று வரை 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4767 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று இதன் விலை 4805 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 304 உயர்ந்து 38,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்வினால் தற்போது வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. இதன்பெயரில் வெள்ளி ரூ.1.10 உயார்ந்து 62.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

