அரசியல்சமூகம்தமிழ்நாடுமருத்துவம்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்க்கு கொரோனா தொற்று உறுதி !

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த இரண்டு மாதங்களாக அதிகரிக்க வருகிறது. இந்நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சாத்தூரில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அமைச்சர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts