அரசியல்தமிழ்நாடு

எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு !

விலைவாசி உயர்வு உள்பட நாட்டின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் பாராளுமன்ற மக்களவையில் இன்றும் அமளியில் ஈடுபட்டனர்.

ஒத்திவைப்பு

நாட்டில் விலைவாசி உயர்வு ஜி.எஸ்.டி வரி பணவீக்கம் வேலையின்மை உள்ளிட்ட விவகாரங்களை கொண்டு எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற இரு அவைகளை கடந்த 4 நாட்களாக முடக்கி அமளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், விலைவாசி உயர்வு உள்பட நாட்டின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற மக்களவையில் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இன்று 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இன்று மதியம் 12 மணிக்கு மக்களவை கூடியதும், எதிர்கட்சியான காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சி உறுப்பினர்கள் பணவீக்க உயர்வுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அவைத்தலைவரின் முறையீட்டையும் மீறி எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடர்ந்ததால், அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Related posts