திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் பதியில் ஆடித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் 190வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி வரை 11 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இன்று அய்யா வைகுண்டர் அவதாரபதியில் காலை 5 மணிக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கொடிக்கம்பத்தை அவதாரபதியை ஒரு முறையும், கொடி மரத்தை 5 முறையும் சுற்றி வலம் வந்தது. அதன்பின்னர் 7 மணிக்கு அய்யாவழி அகில திருக்குடும்ப சபை தலைவர் எஸ்.தர்மர் திருவிழா கொடியேற்றினார். தொடர்ந்து 7.30 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி நடைபெற்றது. பகல் 12 மணிக்கு உச்சிப்பட்டு படிப்பு, பணிவிடைக்கு பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். 11ம் திருநாளான ஆகஸ்ட் 1ம் தேதி பகல் 12.05 மணிக்கு தேரோட்டம் நடைபெற இருக்கிறது.

