கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை நாளை பெற்றுக்கொள்வதாக பெற்றோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பதிலளித்துள்ளனர்.
மாணவி தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு வகுப்பு மாணவி கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுத்தனர். மேலும் இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய ஏற்கனவே உத்தரவிட்டது.
நீதிமன்ற விசாரணை
இந்நிலையில், இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவியின் உடலை நாளை காலை 7 மணிக்குள் பெற்றுக்கொள்வதாக பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது. மேலும், மாணவியின் இறுதி ஊர்வலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்றும் மாணவியின் பெற்றோர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

