செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை என்று மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மா.சுப்பிரமணியன்
சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வகத்தில் குரங்கு அம்மை பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து கிங் ஆய்வகத்தின் கட்டமைப்புகளை நேற்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், ’44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர்.
இலவச சிகிச்சை
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரா்கள் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை பெறும் வகையில் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்த அடையாள அட்டை மூலம் மாமல்லபுரத்தில் உள்ள 13 மருத்துவமனைகளில் ரூ.2 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம்’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

