Editor's Picksஅரசியல்இந்தியாதமிழ்நாடு

மாநிலங்களவை தேர்தல் – தமிழக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

மாநிலங்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அதிகாரப் பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10ம் நடைபெறும் என்றும் வேட்புமனு தாக்கல் 24ம் தேதி தொடங்கி – 31ம் தேதி முடிவடையும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த தேர்தலில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதில் திமுக ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது போக மீதம் உள்ள 3 இடங்களுக்கு வேட்பாளார்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் சார்பாக இன்னும் வேட்பாளார் அறிவிக்கவில்லை. அதிமுகவில் வேட்பாளார்கள் முடிவு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 29.06.2022 தேதி அன்று முடிவைடைய உள்ள நிலையில் காலியாகும் இடங்களை நிரப்புவதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் கால அட்டவணை வெளியிட்டுள்ளது.

தேர்தல் அறிவிக்கை

தேர்தல் அறிவிக்கையை வெளியிடும் நாள் மற்றும் வேட்புமனு தாக்கல் 24.05.2022 தொடங்கி 31.05.2022 தேதி முடிவுபெறும். வேட்பு மனு தாக்கல் பரிசீலனை ஜூன் 1ம் தேதி நடைபெறும். ஜூன் 3 தேதி தான் வேட்பு மனு தாக்கலை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள்.

வாக்குப்பதிவு நாள் ஜூன் 10ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவடையும்.
தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் முடிவடையும் நாள் ஜூன் 13 என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் அதிகாரி

இந்திய தேர்தல் ஆணையம், தமிழக சட்டப்பேரவை செயலகத்தின் செயலாளரை தேர்தல்  அதிகாரியாகவும், தமிழக சட்டப்பேரவை செயலகத்தின் துணை செயலாளரை உதவி தேர்தல் அதிகாரியாகவும் நியமனம் செய்துள்ளது.

வேட்பு மனு ஆவணத்தை தமிழக சட்டப்பேரவை செயலகத்தில் உள்ள அலுவலக அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும்.
வாக்குப்பதிவு, ‘சட்டமன்ற குழு அறை’யில்  நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts