அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் தான் பெண் தொழில் முனைவோர் அதிகம் – முதலமைச்சர் பெருமிதம் !

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் தொழில் முனைவோர் பெண்கள் அதிகம் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

ஈரோடு மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘இந்தியாவிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில்தான் உள்ளன. இந்தியாவில் உள்ள பெண் தொழில் முனைவோருரில் தமிழகத்தில் தான் அதிகம் என கூறினார். இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் தமிழக திட்டங்களை பின்பற்றி வருகின்றன. அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட பல்வேறு திட்டங்களை மீண்டும் செயல்படுத்துகிறோம். ஒருசில தொழிலதிபர்கள் மட்டும் வளர்வது அல்ல வளர்ச்சி, அனைவரும் வளர்வதுதான் வளர்ச்சி. நாட்டிலேயே தனிநபர் வருமானம் தமிழ்நாட்டில் தான் அதிகம். மக்களை காக்கக்கூடிய அரசாக மட்டுமில்லாமல் மண்ணையும் காக்கக் கூடிய அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது.

Related posts