“மன்னித்துவிடுங்கள்” கோப்ரா பட புரொமோஷன் பணி நடைபெற்று வருவதால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என இயக்குனர் ட்விட் செய்துள்ளார்.
மன்னித்துவிடுங்கள்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோப்ரா’. இப்படத்தை ‘செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ’ தையரித்துள்ளது. இப்படம் வருகிற 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் இந்த புரொமோஷனில் இயக்குநர் அஜய் ஞானமுத்து கலந்து கொள்ளாதது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இந்த கேள்வி தொடர்பாக அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அந்த பதிவில், “மன்னித்துவிடுங்கள் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுவதால் கலந்து கொள்ளமுடியவில்லை. விரைவில் புரொமோஷனில் கலந்துகொள்வேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

