சினிமாவெள்ளித்திரை

வெளியானது விஷால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !

ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் விஷால் தற்போது அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி படத்தில் முடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ‘திரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்க, எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Related posts