அரசியல்சமூகம்தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மி தொடர்பான தடை குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை !

ஆன்லைன் ரம்மி தொடர்பான தடை குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.

ஆலோசனை

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் தொடர் தற்கொலை நடைபெற்று வருகின்றது. குறிப்பாக ரம்மி, சூதாட்டம், லாட்டரி உள்ளிட்ட விளையாட்டுகளில் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் பல இடங்களில் அரங்கேறி வருகின்றது. இதனை தடுக்கும் விதமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள், பல கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஆன்லைன் ரம்மி தொடர்பான தடை குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனையில் முதமைச்சரின் தனிச்செயலர் உதயசந்திரன் ,உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி ,டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related posts