சென்னை வியாசர்பாடியில் கஞ்சா விற்பனையில் பெண் உட்பட 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குண்டர் தடுப்பு சட்டம்
சென்னை, வியாசர்பாடி சேர்ந்தவர் அறுப்பு ரமா (49). வியாசர்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா வியாபாரம் செய்து வந்துள்ளார்.இவரை சில தினங்களுக்கு முன் 16 கிலோ கஞ்சாவுடன் போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல கஞ்சா வழக்குகள் உள்ளளதால், இந்நிலையில், அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், வியாசர்பாடி எஸ்.ஏ. காலனியை சேர்ந்த அருண்பாண்டி , தொப்பை அசோக் , பல்லு ரவி ஆகியோர் எம்.கே. பி. நகர் பகுதியில் உள்ள குணசேகர் மற்றும் அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோரை வீடு புகுந்து கத்தியால் தாக்கினர். இந்நிலையில், அருண்பாண்டி, தொப்பை அசோக், பல்லு ரவி, முரளிகிருஷ்ணன் ஆகியோரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் அதே பகுதியில் கஞ்சா விற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

