ஒரு கணினியில் இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்திடும் போது 32 Bit அல்லது 64 Bit என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதை பார்த்திருப்போம்.
இதனை கவனிக்காமல் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்துவிட்டால் அது தலைவலியாக அமைந்துவிடும். உண்மையில் 32 Bit கணினிக்கும் 64 Bit கணினிக்கும் இடையே இருக்கின்ற வித்தியாசம் என்ன?
ஒரு கணினியில் இருக்கக்கூடிய சிபியு ரெஜிஸ்டர் (CPU register) மெமரிக்கான முகவரியை [Memory Address] சேமித்து வைத்திருக்கும். இதனை பயன்படுத்திதான் Processor ஆனது தகவலை RAM இல் இருந்து பெரும். ஆகவே ஒரு 32 Bit processor ஆல் 2^32 (4,294,967,296) மெமரி இருப்பிடங்களில் (Memory Location) இருந்து தகவலை பெற முடியும் [ 32-bit address bus can address 232 (4,294,967,296) memory locations] .
ஒவ்வொரு மெமரி லொகேஷனும் ஒரு byte அளவிலான தகவலை சேமித்து வைத்திருக்கும். கிட்டத்தட்ட 4 GB RAM ( 4,294,967,296 bytes) அளவிலான தகவலை பெற முடியும்.
64 Bit processor ஆல் 2^64 (18,446,744,073,709,551,616 bytes) மெமரி இருப்பிடங்களில் (Memory Location) இருந்து தகவலை பெற முடியும். இதன் அளவு 17,179,869,184 GB. 32 bit உடன் ஒப்பிடும் போது இது பல மடங்கு அதிகம்.
32 Bit vs. 64 Bit மிக முக்கியமானது வேகம். 32 Bit ஐ விட 64 Bit இல் ஒரு நொடியில் பல மடங்கு கணக்குகளை செய்திட முடியும் [Calculations per second] . இதனால் 64 Bit கணினி மிக வேகமாக செயல்பட முடியும்.
ஆகையினால் தான் 64 bit கணினியில் ஒரே நேரத்தில் பல அப்ளிகேசனைகளை எந்தவித தடங்கலுமின்றி இயக்கிட முடியும். மிகப்பெரிய கேம்கள் மற்றும் எடிட்டிங் உள்ளிட்ட சாப்ட்வேர் களை பயன்படுத்திட தகுந்த கணினியாக 64 Bit இருக்கிறது.