அரசியல்சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடு

தூத்துக்குடி அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை !

தூத்துக்குடி அருகே திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் தோட்டத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

வெட்டி படுகொலை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி – எட்டையபுரம் ரோட்டில் தெற்கு திட்டங்குளம் என்ற ஊர். இங்கு ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் இருந்து வருகிறார். இன்று காலை தனது தோட்டத்தில் இருந்த பொன்ராஜ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சம்பவ குறித்து தகவல் அறிந்த  இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொன்ராஜை வெட்டி கொன்ற கொலையாளிகளை கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts