அரசியல்தமிழ்நாடு

தமிழக முதலமைச்சரைச் சந்தித்து புத்தகம் வழங்கிய ராமசுப்ரமணியன் !

அரசியல் விமர்சகர், இந்துவா ஆதரவாளருமான ராமசுப்ரமணியன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.

ராமசுப்ரமணியன்

சமீபத்தில் தமிழகத்தில் கோயில்களில் பராமரிப்பை செழுமைப்படுத்தவும், பக்தர்களின் வசதியை மேம்படுத்தவும் தமிழக முதலமைச்சர்  தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மேலும், குழுவிற்கான உறுப்பினர்களை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. 17 பேர் கொண்ட அந்த குழுவில் கல்வியாளர் ராமசுப்ரமணியனும் அலுவல்  உறுப்பினராக இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் தமிழக முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்த ராமசுப்ரமணியன் தான் எழுதிய ‘நான் சென்ற சில நாடுகள்’ எனும் புத்தகத்தை தமிழக முதலமைச்சருக்கு வழங்கினார்.

Related posts