சமூகம்தமிழ்நாடுவணிகம்

சின்ன வெங்காயம் விலை உயர்வு : இல்லத்தரசிகள் கவலை!

விலை உயர்வு

கோவை, திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. தினந்தோறும் 8 முதல் 10 வாகனங்கள் வரை சின்ன வெங்காயம் வருவது வழக்கம். ஆனால் கடந்த சில வாரங்களாக 2 வாகனங்களில் மட்டுமே சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. இதனால் வரத்து குறைந்து சின்ன வெங்காயம் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி கடந்த ஜூன் மாதத்தில் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது  மொத்த விற்பனை கடைகளில் ரூ.90-க்கும், வெளி மார்க்கெட்டில் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் திடீர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related posts