அரசியல்தமிழ்நாடு

பாஜவை கண்டித்து காங்கிரஸ் மறியல் போராட்டம் – தமிழக காங்கிரஸ் அறிவிப்பு !

பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து வரும் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை மறியல் போராட்டம் நடத்த போவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

காங்கிரஸ் பயிற்சி முகாம்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே ஈ.சி.ஆர். சாலையில் உள்ள தனியார் ரிசார்டில் உதய்பூர் காங்கிரஸ் கொள்கைப் பிரகடனப் பயிற்சி முகாம் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில், இறுதி நாளான நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசு மற்றும் முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது மேடையில் பேசிய ப. சிதம்பரம், காங்கிரஸ் தொண்டர்கள் துணிச்சலுடன் செயல் படவேண்டும். தினந்தோறும் சமுக வலைத்தளத்தில் எழுத வேண்டும், பேச வேண்டும்.

காங்கிரஸ் பயிற்சி முகாம்
காங்கிரஸ் பயிற்சி முகாம்
முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம்

பாஜக கற்பனை செய்துள்ள இந்திய வேறு. நேருவும், காந்தியும் மற்றும் அம்பேத்கரும் உருவாக்கிய இந்திய வேறு என்பதை நம் புரிந்து கொள்ளவேண்டும். 2024லில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றதும் புதிய பொருளாதார கொள்கை உருவாக்கப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். கல்வி தரம் உயர்த்தப்படும். மருத்துவத்துறை சீர்படுத்தப்படும் என தெரிவித்தார்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைவர் கே எஸ் அழகிரி, ‘பாஜகவின் தவறான போக்கை கண்டித்து மதசார்பற்ற கட்சினரை ஒன்றிணைத்து வரும் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை மறியல் போராட்டம் நடத்துவது என்றும் ஆகஸ்ட் 9ம் தேதி ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள் 75 கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை பரப்பவேண்டும். பாஜக இந்திய மக்களுக்கு செய்துவரும் அவலத்தை எடுத்து கூறவேண்டும்’ என தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி கூறியுள்ளார்.

Related posts