மனிதர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். சிலருக்கு அந்த பிரச்சனைகள் சுலபமாக தீர்த்து விடும். சிலருக்கு சிறிய கஷ்டம் வந்தால் கூட அது பெரிய அளவிலான பாதிப்பைத் தந்துவிடும்.
இதற்கு ஒரு முக்கிய காரணம் விதி மட்டும்தான். விதி என்று நினைத்து கஷ்டங்களை நம் தலையில் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அந்த கஷ்டத்திற்காக தீர்வு என்ன என்பதை தேடுபவர்களுக்கு அதிர்ஷ்டமானது நிச்சயம் கை கொடுக்கும்.
மிகப்பெரிய கஷ்டங்களை எல்லாம் கூட சுலபமாக தீர்த்து வைக்கும் இந்த அதிர்ஷ்டத்தையும், அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் தேவதைகளையும் எப்படி நம் அருகிலேயே வைத்துக் கொள்வது? இதற்கான ஒரு சிறிய ரகசியத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
பொதுவாகவே மாலை 6 மணி அளவில் மகாலட்சுமியுடன் மற்ற தேவதைகளும் வீதியில் வலம் வருவார்கள் என்று கூறுவது நம் ஐதீகம்.
இப்படி அவர்கள் உலாவரும் சமயத்தில் எந்த வீடு மங்களகரமாகவும், வாசனை நிறைந்ததாகவும் இருக்கின்றதோ அந்த வீட்டில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள் என்பதும் நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ள கூற்று.
இப்படி நம் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும் இந்த மகாலட்சுமியுடன் சேர்ந்த அதிர்ஷ்ட தேவதைகளை எப்படி நம் வீட்டின் பக்கம் பார்க்க வைப்பது? வாசனை மிகுந்த பொருட்களை நம் வீட்டில் வைத்துக் கொள்வதன் மூலம் நிச்சயமாக இவர்களை நம்மால் வசியம் செய்து கொள்ள முடியும்.
தினமும் மாலை வேளையில் ஒரு தீபத்துடன் சேர்த்து வாசனை மிகுந்த ஊதுவத்திகளை நம் வீட்டில் ஏற்றி வைத்தாலே போதும்.
இப்படி செய்வதின் மூலம் வீட்டிற்குள் அதிர்ஷ்ட தேவதைகளை நிரந்தரமாக தங்கவைக்க முடியும். நறுமணம் மிகுந்த இடங்கள் என்றைக்கும் அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் தேவதைகள் வாழும் இடங்கள் ஆகும்.
இந்த எளிய செயலை செய்வதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். வீட்டின் வாஸ்து பிரச்சினை நீங்கும். தொழிலில் ஏதாவது முடக்கங்கள் இருந்தால் அது விரைவில் சரியாகி விடும்.
வேலையில் பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு. ஆரோக்கியத்தில் முன்னேற்றம். இப்படி எப்படிப்பட்ட பிரச்சனையையும் தீர்க்கும் ஆற்றல் இந்த தீப தூபங்களுக்கு உண்டு.
ஆகையால், நாம் தினமும் தீப தூபங்கள் ஏற்றி அதிர்ஷ்ட தேவதைகளிடம், வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், அதை சரியாக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.