வைரலாகும் டிரைலர்
டான் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ப்ரின்ஸ்’. தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடித்துளளார். மேலும், சத்யராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், ப்ரின்ஸ் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Here is our #PrinceTrailer – https://t.co/644ReR6Whs
Hope you all like it😊👍#Prince🕊️#PrinceOnOct21st in theatres👍#PrinceDiwali💥@anudeepfilm @maria_ryab @musicthaman @SVCLLP @SureshProdns @ShanthiTalkies
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 9, 2022

