சமூகம்தமிழ்நாடு

கண்ணகி ஆணவ கொலை வழக்கில் திடீர் திருப்பம் !

கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனை குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கண்ணகி முருகேசன்

கடந்த 2003-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிகண்ணு என்பவரின் மகன் முருகேசன். அதே பகுதியை சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகி என்பவரை காதலித்து 2003ம் ஆண்டு மே 5ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம்

இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் கண்ணகியின் வீட்டார் இவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் இருவரும் தங்களது பெற்றோர்களை மீறி கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்டனர். அதையறிந்த கண்ணகியின் பெற்றோர் திருமணத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 கண்ணகி, முருகேசன்
கண்ணகி, முருகேசன்
கொலை

மேலும், இருவரையும் புதுக்கூரைப்பேட்டை அருகில் உள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவரின் மூக்கு, காது வழியாக விஷத்தை செலுத்தி அவர்களைக் கொலை செய்து, பின்னர் சடலங்களை எரித்துள்ளனர். இதனையடுத்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கடந்த 2004 ம் ஆண்டு முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட சிபிஐ விசாரணையில், கண்ணகியின் தந்தை துரைசாமி, சகோதரர் மருதுபாண்டியன், உறவினர்கள் ரங்கசாமி, அய்யாசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தூக்கு தண்டனை
தூக்கு தண்டனை
தூக்கு தண்டனை

கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும், அந்த வழக்கில் சமந்தப்பட்ட 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதன்தொடர்ச்சியாக குற்றம்சாட்டப்பட்ட 13 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தண்டனை குறைப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் சமந்தப்பட்ட கண்ணகியின் உறவினர்கள் ரங்கசாமி மற்றும் சின்னதுரை ஆகிய இருவரையும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts