சினிமாவெள்ளித்திரை

வெப் சீரீஸாக உருவாகும் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறு!

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக இருந்த எம்.கே தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறு வெப் சீரீஸாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எம். கே. டி

மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம். கே. டி என்றழைக்கப்பட்டார். இவர் 1959ம் ஆண்டு காலகட்டங்களில் தமிழ்த் திரையுலகின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர். மேலும், மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகராகவும் இருந்தவர். 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இதனைதொடர்ந்து சுமார் 15 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 வெப் சீரிஸாக பாகவதரின் வாழ்க்கை
Thiyagaraja Bhagavathar, vasanth
முதல் சூப்பர் ஸ்டார்

1944 இல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ‘ஹரிதாஸ்’ 3 ஆண்டுகள் சென்னையில் உள்ள பிராட்வே திரையரங்கில் ஒடியது. 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை பெற்றது. இதன் மூலம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெயரையும் பெற்றார்.

கொலை வழக்கு

சென்னையில் அந்த காலகட்டத்தில் மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டார். பின்னர் 1959 ம் ஆண்டு ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டு இளவயதிலேயே மரணமடைந்தார்.

வாழ்க்கை வரலாறு

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்த எம்.கே தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை படமாக எடுக்கபோவதாக கூறப்படுகிறது. இதை தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான வசந்த் இயக்கபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Director Vasanth
Vasanth
இயக்குனர் வசந்த்

தமிழில் கேளடி கண்மணி திரைப்படம் முலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்த். அதனைதொடர்ந்து நீ பாதி நான் பாதி, ஆசை, நேருக்கு நேர் போன்ற படங்களின் மூலம் பிரபலமானார். இவருடைய முதல் படமான கேளடி கண்மணி சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இத்திரைபடம் திரையரங்கில் 285 நாள் ஒடிச் சாதனை படைத்தது. மேலும், தமிழித் திரையுலகில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாகக் கேளடி கண்மணி திரைப்படம் கருதப்படுகிறது.

இதனால் எம்.கே தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறை வசந்த் இயக்குகிறார் என்ற தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

Related posts