சமூகம்சினிமாதமிழ்நாடு

கலகமில்லா ஒற்றைத் தலைமையே ! சர்ச்சையாகும் விஜய் போஸ்டர் !

தற்போது இணையத்தில் சர்ச்சையாகி வருகிறது விஜயின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்.

தளபதி விஜய்

தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 1992ம் ஆண்டு ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஜய். தொடக்கத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் அதன்பிறகு ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பு, நடனம், ஆக்‌ஷன், உடல் மொழி என்று ஒவ்வொன்றிலும் தன்னை செதுக்கிக்கொண்டார். நடிகர் ரஜினிக்கு பிறகு சின்ன குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை குடும்பத்திலுள்ள அனைவரையும் ஈர்த்தவர் விஜய். தனது ரசிகர்களால் தளபதி என்று அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜய் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தலைப்பு சர்ச்சை

பீஸ்ட் படத்தை பிறகு விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். படத்தின் தலைப்பு என்ன என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளையொட்டி நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டது படக்குழு. படத்தின் தலைப்பு வாரிசு இணையத்தில் சர்ச்சையானது. ஏற்கனவே 2018ம் ஆண்டு வெளியான சர்கார் படத்தின் தலைப்பு அரசியல் ரீதியாக சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய்

ரசிகர்கள் வாழ்த்து

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜயின் 48வது பிறந்த நாளையொட்டி பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். விஜய்யின் ரசிகர்கள் அவருக்கு போஸ்டர்கள் ஒட்டி, அதன் மூலம் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், சமீப காலமாக நடிகர் விஜய்க்காக ஒட்டப்படும் போஸ்டர்களில் பெரும்பாலும் அரசியல் வாசகங்கள் இடம்பெற்று வருகிறது. மதுரை ரசிகர்கள் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில் விஜய்யை தமிழகத்தின் முதல்வர் போலவும், முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா போலவும், கிரிக்கெட் வீரர் தோனி என்று பல்வேறு விதமாக அவரை அரசியலில் தொடர்புப்படுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.

விஜய் போஸ்டர்

அரசியல் வாசகங்கள் 

இந்நிலையில், மதுரை வடக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நகர் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ‘கலகமில்லா எங்கள் ஒற்றைத் தலைமையே’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இது இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தின் எதிர்கட்சியான அதிமுகவில் ஒற்றைதலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சமயத்தில் நடிகர் விஜய்யை ஒற்றைத்தலைமை என்று வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

Related posts