டிரைலர்
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், நடிகர் வடிவேலு நடித்துள்ள திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இதில் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் பின்னணி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் வடிவேலு தனது வழக்கமான பாணியில் கலக்கி இருக்கிறது.

