பிரபல தயாரிப்பாளர்
லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் கே.முரளிதரன். 1994-ம் ஆண்டு வெளியான ‘அரண்மனை காவலன்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் முரளிதரன். அதனைத்தொடர்ந்து ‘அன்பே சிவம்’, ‘கோகுலத்தில் சீதை’, ‘பகவதி’, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களை தனது லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் மூலம் வி.சுவாமிநாதன் ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து தயாரித்தார். கே.முரளிதரன் இறுதியாக கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘சகலகலா வல்லவன்’ படத்தை தயாரித்திருந்தார். சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த இவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், தயாரிப்பாளர் கே.முரளிதரன் மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார். இது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

