மருத்துவம்

ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க இதோ சில எளிய வழிமுறைகள்!

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதை கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம். ஏனெனில் இது இதய செயலிழப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் 5 வழிகளை இங்கே காணலாம்.

blood pressure

உடற்பயிற்சி :

உங்களின் பிஎம்ஐ அளவை (Body mass index) அதிகரிப்பதற்கும், உயர் ரத்த அழுத்தத்தினைக் குறைப்பதற்கும் சிறந்த வழி உடற்பயிற்சி மேற்கொள்வது. அதுவும் வழக்கமான ஒன்றாக இருக்க வேண்டும்.

வாக்கிங் மற்றும் வீட்டைச் சுற்றி செய்யும் வேலைகள் அனைத்தும் உங்களின் உயர் ரத்த அழுத்தத்தினைக் குறைக்க உதவும்.

walking exercise

இதுவரை உடற்பயிற்சி மேற்கொள்ளாதவர் என்றால் எளிய உடற்பயிற்சியினை செய்ய முயற்சி செய்யுங்கள்.

தியானம், யோகா போன்றவற்றையும் மேற்கொள்ளலாம். இதன்மூலம் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கலாம். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடப்பது ரத்த அழுத்ததைக் கட்டுப்பாடாக வைத்திருக்க உதவும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம் :

சத்தான உணவுப்பழக்கம் ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தினைப் பெற உதவும். உணவுகளில் கொலஸ்ட்ரால் குறைந்த மற்றும் சீரான சம அளவு ஊட்டச்சத்தினைக் கொண்டவற்றைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் புரதச்சத்து நிறைந்தவை மற்றும் குறைந்த கொழுப்பு (அல்லது) கொழுப்பு இல்லாத பால் பொருட்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

healthy food

கொழுப்புகள் அடங்கியுள்ள இறைச்சி உணவினை அறவே தவிர்க்க வேண்டும். காலையில் நல்ல ஆரோக்கியமான உணவினை வயிறு நிறைய உண்ணலாம்.

ஆனால் இரவில் அரை வயிறு உணவினை உண்டாலே போதுமானது. வயிறு நிறைய உணவினை உண்ணும்போது அந்த உணவு செரிக்க உடல் உழைப்பினை மேற்கொள்ள வேண்டும்.

காபி தவிர்த்தல் :

தினமும் அதிக டீ மற்றும் காபி போன்ற பானங்களை அருந்தாமல் இருப்பதும் நன்மை பயக்கும். காபியில் இருக்கக்கூடிய காஃபின் என்கிற வேதிப்பொருள் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

வெந்தயத்தை ஊற வைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறையும். இந்த நீரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை தினசரி காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

காலையில் எழுந்தவுடன் டீ, காபி போன்றவற்றைத் தவிர்த்து இதனைக் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தியானம் :

மன அழுத்தம் ரத்த அழுத்த அளவினை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். உடலும், மனதும் சரியாக இருந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

மனக்கவலை, பயம், கோபம் இருந்தால், அது ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

meditation

அதற்காக இசை, யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நன்மை பயக்கும். காலையில் வழக்கமாக அமைதியான சூழலில் பத்து நிமிட தியானம் மிக அதிக அளவில் மன அழுத்தத்தினைக் குறைக்கிறது.

Related posts