தமிழகத்தில் இந்துக்களின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் என தமிழக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள்
தமிழகத்தில் இந்துக்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் 2006 ஆண்டு அப்போதைய தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் இந்த திட்டம் சுமார் 14 ஆண்டுகளாக பெரிய அளவில் நடைமுறை படுத்தவில்லை. தற்போது திமுக அரசு பொறுப்பேற்றபின் இத்திட்டத்தை நடைமுறை படுத்தி வருகிறது. இதற்கான வயது வரம்பு 14 முதல் 24 வயதுகுள் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
குழு அமைப்பு
முன்னதாக, 2002ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும், சாதி பாகுபாடின்றி அர்ச்சகர்கள் நியமிப்பதற்கு சட்ட ரீதியாகவோ அல்லது அரசியல் சட்ட ரீதியாகவோ எவ்வித தடையுமில்லை என்ற அரசு தலைமை வழக்கறிஞர் கருத்தின் அடிப்படையிலும் இந்த முடிவை அப்போதைய தமிழக அரசு எடுத்தது. இந்த அரசாணை சிறப்பாக செயல்படுவதற்காக குழு அமைக்கப்பட்டு அர்ச்சகர் பயிற்சிக்கான பாடத்திட்டம், பயிற்சியாளர்க்கான அடிப்படைக் கல்வித் தகுதி, வயது, பயிற்சிக்கான வரையறை, பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை தொடர்பாக இந்த குழு அரசுக்கு பரிந்துரை அளித்தது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இதில் 240 மாணவர்கள் இந்த பயிற்சி பள்ளியில் சேர்ந்தனர். எழுத்து தேர்வு, செயல்முறை தேர்வு உள்ளிட்ட பல சோதனைகளுக்குப் பிறகு 206 நபர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்களாக இருந்து வந்தன. இந்நிலையில், 2008ம் ஆண்டு ஏற்பட்ட சட்ட போராட்டம் காரணமாக பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டன. கடந்த 2015ம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநிதீமன்றம், ‘அனைத்து சாதியினரும் சாதி வேறுபாடுயின்றி அர்ச்சகராக நியமிக்க வழிகோலும் அரசாணை அரசியல் சட்டத்தின் 14து பிரிவை மீறும் செயலக கருத முடியாது. இருப்பினும், ஆகம விதிகளின் படி இந்த நியமனம் இருக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
பணி நியமனை ஆணை
மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி 56 நபர்களுக்கு பணி நியமனை ஆணையை வழங்கியது தமிழக அரசு. இதில் 24 பயனாளிகள் ஆறு திருக்கோவில்களில் நடத்தப்படும் பயற்சிப் பள்ளிகளில் பயின்ற இதர சாதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்படத்தக்கது.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, பழனி தண்டாயுதபாணி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி ஆகிய நான்கு கோவில்களில் பயற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பயிற்சி ஆசிரியர்கள் நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த இரண்டு திருக்கோயில்களில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு தமிழக அறநிலையத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.