சமூகம்சினிமாமருத்துவம்

இயக்குநர் பாரதிராஜா விரைவில் மீண்டு வருவார் – கவிஞர் வைரமுத்து !

சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் பாரதிராஜா விரைவில் மீண்டு வருவார் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் பாரதிராஜா உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் தங்கி சில நாட்கள் சிகிச்சை மற்றும் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா விரைவில் மீண்டு வருவார் என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவில், ‘மருத்துவமனையில் பாரதிராஜாவைப் சந்தித்தேன். நலிந்த நிலையிலும் நகைச்சுவை தீரவில்லை. சின்னச் சின்னப் பின்னடைவுகளைச் சீர்செய்ய மருத்துவர்கள் சூழ நிற்கிறார்கள். அல்லி நகரத்தை டில்லி நகரத்திற்கு அழைத்துச் சென்ற மகா கலைஞன் விரைவில் மீண்டு வருவார். கலையுலகை ஆண்டு வருவார்’ என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Related posts