வாரிசு படத்தின் லீக் செய்யப்பட்ட வீடியோ, புகைப்படங்களை இணையத்தில் பகிர வேண்டாம் ரசிகர்களுக்கு நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாரிசு படம்
பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. தெலுங்கு பட இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதனிடையே வாரிசு படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்தபோது, சிலர் அதை திருட்டுத்தனமாக படம் பிடித்து இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துள்ளனர். பைக்கில் வருபவர்களை கீழே தள்ளி விட்டு விஜய் சண்டைபோடுவது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
வேண்டுகோள்
இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் லீக் செய்யப்பட்ட வீடியோக்கள் எதையும் பகிர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.