மறைவு
குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்து வந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த ஹீராபென் மோடியின் உடலில் முன்னேற்றம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று அதிகாலை காலமானார். இவரது மறைவுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இரங்கல்
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன், மோடியில் தாயார் மறைவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் ‘பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன். அவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். 200 வயதானாலும் தாய் தாய்தான். இழப்பு இழப்புதான்’ என குறிப்பிட்டுள்ளார்.