செம்பி படம்
1999-ம் ஆண்டு வெளியான ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரபு சாலமன். இவர் மைனா, கும்கி. கயல் போன்ற வெற்றி படங்களின் மூலம் பிரபலமானார். இவர் இயக்கத்தில் தற்போது ‘செம்பி’ என்ற படம் உருவாகியுள்ளது. இதில் கோவை சரளா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
டவிட்டர் பதிவு
இந்நிலையில், ‘செம்பி’ படம் குறித்து நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘செம்பி’ படத்தில் பிரபு சாலமனின் பேராண்மையை ரசித்தேன். கதைக்கருவை மட்டுமே நம்பி கோவை சரளாவையும், ஒரு சிறு பெண்ணையும் மையமாக்கி அதிரடி கனெக்ட் செய்யும் கதைக்களமும் ஒரு குற்றத்திற்கு உரிய தீர்ப்பையும் இப்படிக் கூட செயல்படுத்த முடியும் என பிரம்மிப்பில் ஆழ்த்திவிட்டார்’ என குறிப்பிட்டுள்ளார்.

