உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமீபத்தில் நிறுவனத்தை கைப்பற்றினார்.
ட்விட்டர் நிறுவனம்
அதோடு ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார். ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் ட்விட்டர் நிறுவனம் லாபத்தை உருவாக்கத் தொடங்கவில்லை என்றால் திவால் ஆகும் அபாயம் உள்ளது. இதனால் ஊழியர்கள் ஒரு வாரத்துக்கு 80 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று எலான் மஸ்க் கூறினார்.
ராஜினாமா
இதனிடையே எலான் மஸ்க் ட்விட்டர் ஊழியர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பினார். அதில் அதில், ட்விட்டர் வெற்றிபெற நாம் கடினமாக உழைக்க வேண்டும். இல்லையென்றால் மூன்று மாத சம்பளத்துடன் ராஜினாமா செய்யலாம் குறிப்பிட்டிருந்தார்.
பரபரப்பு ட்விட்
அதன்படி நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மொத்தமாக ராஜினாமா செய்தனர். இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில், சிறந்த நபர்கள் ட்விட்டரில் தங்கியிருக்கிறார்கள், அதனால் நான் கவலைப்படவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
The best people are staying, so I’m not super worried
— Elon Musk (@elonmusk) November 18, 2022