சினிமாவெள்ளித்திரை

துப்பறிவாளனாக களமிறங்கும் நடிகர் சந்தானம்!

தெலுங்கு ரீமேக் 

நவீன் பாலிஷெட்டி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படம் ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’. தற்போது இப்படத்தை ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். ‘வஞ்சகர் உலகம்’ படத்தை இயக்கிய மனோஜ் பீதா இந்த படத்தை இயக்க, சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ரியா சுமந்த் கதாநாயகியாக நடிக்க, சுருதி ஹரிஹரன், புகழ், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ராம்தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

புதிய பரிமாணம் 

இந்நிலையில், ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தை பற்றி மனோஜ் பீதா கூறுகையில், தெலுங்கில் இருந்து தமிழில் சில மாற்றங்களை செய்துள்ளேன். இதில் சந்தானம் வேறு பரிமாணத்தில் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் சந்தானம் துப்பறிவாளன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்’ என்று கூறினார்.

Related posts