சினிமாவெள்ளித்திரை

50 நாட்களை கடந்த பொன்னியின் செல்வன் – விக்ரம் நெகிழ்ச்சி பதிவு!

நெகிழ்ச்சி பதிவு

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்-1’. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மேலும், பொன்னியின் செல்வன் -1 படம் 50 நாட்களை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த போஸ்டரை வெளியிட்டு ‘இது கனவு இல்லை என்று யாராவது என்னிடம் சொல்லுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related posts