காலணியை தலையில் தூக்கி சென்ற சமூகத்தினரை மேயராக்கியது தான் திராவிட மாடல் என்று திண்டுக்கல் லியோனி பேசியது இணையத்தில் சர்ச்சையாகி வருகிறது. இவரின் கருத்தை எதிர்த்து பொதுமக்கள் கடுமையான விமர்சித்து வருகிறார்கள்.
திமுக அரசு ஆட்சி
ஆளும் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு முடிந்த நிலையில், திமுக சார்பாக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று வருகின்றது. திமுகவின் பேச்சாளர்கள் பலர் களத்தில் இறங்கி பல்வேறு இடங்களில் கூட்டம் நடத்தி வருகின்றார்கள்.
திண்டுக்கல் லியோனி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவரும், திமுக கொள்கை பரப்பு பேச்சாளருமான திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டார். அப்போது அக்கூட்டத்தில் அவர் பேசியபோது, ‘செருப்பை தலையில் தூக்கி கொண்டு இருந்த சமூகத்தினரை மேயராக்கியது ‘திராவிட மடல்’. அந்த சமூகத்தவரை மாண்புமிகு மேயர் அவர்கள் என அழைக்க வைத்தது திராவிடம்.
இந்த புரட்சியை செய்தவர் முதல்வர் ஸ்டாலின் என்று தெரிவித்தார். அதேபோல் பெண்கள் அரட்டை அடித்து கொண்டு இருப்பார்கள் என்ற நிலையை மாற்றி ஒட்டு உரிமை வாங்கிக்கொடுத்தது நீதிக்கட்சி தான்’ என்றும் கூறினார். இவ்வாறு அவர் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி
இதைப்போன்று கடந்த காலங்களில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியது ‘தாழ்த்தப்பட்ட மக்கள் தற்போது நீதிபதியாக இருப்பது திராவிட இயக்கம் போட்ட பிச்சை’ என்று பட்டியல் இன மக்களை பார்த்து கூறியிருந்தார். இதனை பொதுமக்கள் எதிர்த்து கருத்துக்களை கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.
சாதி விமர்சனம்
சமூகவலைத்தளத்தில் மக்கள், ‘தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் வேறு அதனை தவறான வார்த்தையில் சொல்லிக்காட்டுவது என்பது வேறு. அதுவும் ஒரு சாதி தீண்டாமைதான். செருப்பை தலையில் தூக்கி கொண்ட சமூகத்தின் வாக்கை பெற்று தான் திமுக ஆட்சி அமைத்தது’ என்று சாட்டி வருகின்றனர். இதற்கு குறிப்பாக பல பட்டியல் இன அமைப்புகள், இயக்கங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
திமுக ஒரு சமூகநீதி இயக்கம், சுயமரியாதைக்கு பாடுபடும் இயக்கம், அடித்தட்டு மக்களின் உரிமைக்கு போராடும் கட்சி என்று திமுகவின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் சாதிய மனநிலையில் திமுகவினர் தொடர்ந்து பேசுவதை கண்டு மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும், திமுக அரசுக்கு இது நல்லதல்ல என பல அரசியல் விமசர்களும் தெரிவிக்கின்றனர்.