அரசியல்இந்தியாதமிழ்நாடு

பேரறிவாளன் விடுதலை விவகாரம் – முதல்வர் சந்திப்பு ! காங்கிரஸை சாடும் குஷ்பு !

ராஜீவ் காந்தி கொலை வழக்கு

முன்னாள் முதல்வர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், முதற்கட்ட விசாரணையில் குற்றவாளிகளாக 26 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 19 பேரை விடுதலை செய்து, மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது உச்சநீதிமன்றம். பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் ஆகிய நால்வரின் கருணை மனுவை பல ஆண்டு காலம் நிலுவையில் வைத்தது நீதிமன்றம்.

பேரறிவாளன் விடுதலை

31 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும் இவர்கள், பலமுறை மேல்முறையீடு செய்தும் விடுதலை பெறவில்லை. இதில் தூக்குதண்டனை கைதிகளான பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் என்பவர்களின் தண்டனையை பல வருட போராட்டத்திற்கு பிறகு ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது உயர்நீதிமன்றம். தற்போது பேரறிவாளன் என்பவரின் விடுதலைக்கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு விடுதலை அளித்து தீர்ப்பு வழங்கியது. இதன்படி நேற்று முன்தினம் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்.

முதல்வர் மு. க. ஸ்டாலின் சந்திப்பு

பேரறிவாளன் விடுதலையை பல அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்கின்றனர். பா.ம.க. தலைவர் தனி அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவரின் விடுதலைக்கு வாழ்த்து கூறி, ‘உடல்நலனில் கவனம் கொள்ள வேண்டும்’ என கூறியிருந்தார். தி.மு‌.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் பேரறிவாளன் அவர்களை நேரில் சந்தித்து கட்டி அணைத்தப்படி வாழ்த்து கூறினார்.

காங்கிரஸ் கண்டனம்

பல அரசியல் கட்சியினர் பேரறிவாளன் விடுதலையை வரவேற்றாலும் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு கூறி வருகிறது‌‌. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் ‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை, அதே நேரத்தில் அவர்கள் குற்றவாளிகள், கொலைகாரர்கள் என்பதையும் அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாக கூற விரும்புகிறோம்’ என்று கூறியிருந்தார்.


மேலும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, ‘ராஜீவ் காந்தி தனது உயிரை நாட்டிற்காக தியாகம் செய்தார். அற்ப அரசியலுக்காக அவரை கொன்றவனை விடுதலை செய்வது கண்டிக்கத்தக்கது. பா.ஜ.க. வின் அற்ப அரசியலே குற்றவாளியின் விடுதலைக்கு வழிவகுத்தது’ என்று கூறினார்.

குஷ்பு சாடல்

காங்கிரஸின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக பா.ஜ.க.வை சேர்ந்த நடிகை குஷ்பு அவர்கள் நேற்று மாலை தன்னுடைய கருத்தை இணையத்தில் வெளியிட்டார்.


அதில் அவர் ‘பேரறிவாளன் விடுதலையான பிறகு முதல்வர் அவரை சந்தித்து கட்டி அணைக்கிறார். ஆனால், காங்கிரஸ் பா.ஜ.க. வை குற்றம் சாட்டுகிறது. தி.மு.க. உடனான கூட்டணியை முறிக்க காங்கிரஸ் தயாரா? முதுகெலும்பற்றவர்களின் துணிச்சலற்ற செயலாகவே காங்கிரஸின் நடவடிக்கை இருக்கிறது’ என்று கூறியிருந்தார்.

Related posts