Editor's Picksஅரசியல்இந்தியாதமிழ்நாடு

ஒரு தாயின் 31 வருட போராட்டம், பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார் – உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது !

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்வது என மாநில அமைச்சரவை எடுத்த முடிவு சரியானது தான் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து, வழக்கிலிருந்து விடுவிக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்து தீர்ப்பளித்துயுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தன்னை விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை பிறகு மத்திய அரசு சார்பில் கடந்த வாரத்தில் எழுத்து பூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பிரிவின் 72-ன் படி மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட சட்டப்பிரிவின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டவரை விடுவிப்பது குறித்து குடியரசுத் தலைவரே முடிவு செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தண்டனையிலிருந்து விடுவிக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ள விவகாரங்களில் மாநில அமைச்சரவை பரிந்துரை செய்திருப்பது, அரசியல் சாசன வழிமுறைகளுக்கு எதிரானது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வாதம்

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வமான பதில் அளிக்கப்பட்டுள்ளது. 20 அம்சங்கள் கொண்ட இந்தப் பதிலை மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி தாக்கல் செய்துள்ளார். அதில், மாநில அரசின் அதிகாரம் குறித்து அரசியல் சாசனப் பிரிவு 161 மற்றும் 162-ல் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான முடிவெடுக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வாதம்

மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ் தாக்கல் செய்த வாதங்கள், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுளின் தீர்ப்புகளுக்கு முரணாக இருப்பதகாவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்டால், கடந்த 72 ஆண்டுகளாக நாடு முழுவதும் 161-வது அரசியல் சாசன பிரிவின் படி எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என்ற நிலை ஏற்படும் என தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, அரசியல் சாசன பிரிவின் படி தமிழக அரசு எடுத்த முடிவு என்பது அரசியல் சாசனத்துக்கும், குற்றவியல் சட்டப்பிரிவுகளுக்கும் உட்பட்டு எடுக்கப்பட்ட சரியான முடிவு தான் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பேரறிவாளன் விடுதலை

இந்த விவகாரத்தில் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை முடிந்த நிலையில், இன்று காலை பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அரசியல் சாசன 161-வது பிரிவின் படி 7 பேரையும் விடுதலை செய்ய அதிகாரம் உள்ளதாக முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பு வழங்கியது குறிப்பிட்டத்தக்கது.

ஒரு தாயின் 31 ஆண்டுகளான போராட்டம் வெற்றிபெற்றது. தமிழகத்தில் உள்ள ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள், இன்னும் பல இயக்கங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி உள்ளனர்.

Related posts