கொழும்பு காலி முகத்திடல் போராட்டக்களத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நடைபெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் பலக்லைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர்.
முள்ளிவாய்க்கால்
தனி தமிழ் தேசத்தில் ஈழமக்களுக்காக சிங்கள படையை எதிர்த்து நின்ற வீரப்படை, தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் புலிகள்படை. இலங்கையில் வடக்கு பகுதியில் உள்ள ஒரு சில இடங்கள் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தன. அப்பகுதிகளில் ஒன்றுதான் முள்ளிவாய்க்கால் பகுதி.
படுகொலை
இலங்கையில் மஹிந்த ராஜபக்சே ஆட்சியின்போது நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த அப்பாவிகளானா தமிழீழ மக்களை ஈவு இரக்கமின்றி ஷெல் குண்டுகளை வீசி கொலைகாடாக்கியது இலங்கை ராணுவம். இந்த கொலை தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான ஈழதமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
பலர் உடலுறுப்புகளை இழந்து வாழ்வாதாரத்தை தொலைத்தனர். சிலர் காணாமல் போயினர். உலகிலுள்ள அனைத்து தமிழ் மக்களாலும் மறக்கவும், மன்னிக்கவும் முடியாத ஒரு துயர நிகழ்வுதான் “முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை”.
நினைவேந்தல்
ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்கால் படுகொலையில் கொலைசெய்யப்பட்ட ஈழ தமிழ் மக்களுக்கு நீதி கோரி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலை உலக தமிழர்கள் அனைவரும் அனுசரிப்பது வழக்கம். அந்த வகையில் 13ம் நினைவேந்தலான இன்று, தென்னிலங்கை கொழும்புவில் உள்ள, காலிமுகத்திடலில் உருவாக்கப்பட்டுள்ள கோட்டா கொ கமாவில் நினைவேந்தல் நடைபெறுகின்றது.
கடந்த ஆண்டு இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நடைபெற தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இலங்கையின் தலைநகரான கொழும்பிலேயே நினைவேந்தல் நடைபெற்றுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் பலக்லைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர்.