சினிமா

நான் நடிக்கும் கடைசி படம் மாமன்னன் தான்- உதயநிதி ஸ்டாலின்!

‘இனி சினிமாவில் நடிக்கபோவது இல்லை’ என்று நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

உதயநிதி

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். இவர் 2008ம் ஆண்டு விஜய் நடித்த குருவி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானார். மேலும், ஆதவன், மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு போன்ற படங்களை தயாரித்தார். விண்ணை தாண்டி வருவாயா, மைனா, மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை வெளியிட்டும் இருக்கிறார். இதனிடையே 2012ம் ஆண்டு வெளியான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார்.

 

நடித்த படங்கள்

அதனையடுத்து தனது இரண்டாம் படமான இது கதிர்வேலன் காதல் படத்தில் முன்னணி நடிகையான நயன்தாராவுடன் இணைந்து நடித்தார். இதனைதொடர்ந்து நன்பேண்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக என் மனசு தங்கம், இப்படை வெல்லும், நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

சட்டமன்ற உறுப்பினர்

இந்நிலையில், கடந்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். மேலும், கடந்த சில ஆண்டுகளாக திரைப்பட தயாரிப்பு, விநியோகம் போன்ற வேலைகளில் ஈடுப்படாமல் இருந்தார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில், தற்போது அவர் சமீபத்தில் வெளியான ராதே ஷ்யாம், காத்துவாக்குல ரெண்டு காதல், டான் போன்ற படங்களை தமிழகத்தில் வெளியிட்டு வருகிறார்.

Another son rises in DMK: Udhayanidhi Stalin to become Youth Wing Secretary | The News Minute

இறுதி படம்

மேலும், அவர் தற்போது அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ மற்றும் மகிழ் திருமேனி இயக்கும் புதிய படம் என தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வரும் 20ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் இத்திரைப்படத்தில் ப்ரோமோஷன்க்காக பல நிகழ்சிகளில் பங்கேற்று வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், மாமன்னன் படம் தான் தனது கடைசி படமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்காகவே தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனால் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர்கள் ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளர்கள்.

Related posts